பாளையங்கோட்டை தெற்கு பகுதி அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு

பாளையங்கோட்டை தெற்கு பகுதி அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு
X

பாளையங்கோட்டையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நெல்லையில் தெற்கு பகுதி அதிமுக கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளார் தச்சை - கணேசராஜா திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தெற்கு பகுதி அதிமுக சார்பில் பாளையங்கோட்டையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமை தாங்கி திறந்துவைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாளை தெற்கு பகுதி கழக செயலாளர் திருத்து. சின்னதுரை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், நீர் மோர் பந்தலில் தண்ணீர் மோர், ரோஸ்மில்க், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி பழம் ஆகியன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் ஆர் பி ஆதித்தன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், எம் ஜீ ஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரிய பெருமாள், அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட், சிறுபான்மை நலப்பிரிவு மகபூப்ஜான், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பகுதி கழக செயலாளர் மோகன், தச்சை பாக்கியராஜ், பேன்ஸி சம்சு சுல்தான், நெல்லை மேற்கு பகுதி வாகை மணி மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!