அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் போட்டிகள் நடைபெற்றது

அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் போட்டிகள் நடைபெற்றது
X

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் அரிமா சங்கம் இணைந்து நடத்திய காந்தி பிறந்தநாள் விழா போட்டிகளில் பங்கேற்ற பள்ளிக்குழந்தைகள்

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காந்திஜி பிறந்தநாளை முன்னிட்டு ஓவியம், பொன்மொழிகள்,மாறுவேட போட்டிகள் நடைபெற்றது

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் அரிமா சங்கம் இணைந்து மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தியது

அரசு அருங்காட்சியகமும் அரிமா சங்கமும் இணைந்து மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை வாசகம் சொல்லும் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. இப்போட்டியில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி துவக்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா, கலை ஆசிரியை சொர்ணம் மற்றும் ஓவிய ஆசிரியர் இசக்கியப்பன் ஆகியோர் இருந்தனர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!