பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம்

பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம்
X

மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற  எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை தொகுதி தலைவர் மின்னத்துல்லாஹ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் சிந்தா வரவேற்புரை ஆற்றினார், தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகம்மது, செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து மீளாய்வு நடைபெற்றது. தொடர்ந்து ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்காக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம் நடத்திய கடிதங்களை முதல்வருக்கு அனுப்புவது, நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் சட்டப்பிரிவு 161 ன் படியும் அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மேலப்பாளையத்தில் மார்ச் 26ல் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது, மார்ச் 30 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, மேலப்பாளையம் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலப்பாளையம் பகுதிகளில் அடிப்படை சுகாதாரம் மேம்படுத்தப்பட கூடுதல் பணியாளர்கள், வாகனங்கள், உபகரணங்கள் அதிகப்படுத்த வேண்டும். சாலைகள் உயரத்தை மேலும் அதிகரிக்காமல் தோண்டிய சாலைகள் போடவேண்டும். மேலப்பாளையம் 50வது வார்டு அண்ணை ஹாஜிரா கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் பொறுப்பெற்றுள்ள இணை இயக்குனர் அலுவலகம் திறம்பட செயல் பட வசதிகளை ஏற்படுத்திடவும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரணங்கள், மருத்துவ மனையை சீர்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக செயல் படுத்த வேண்டும். திட்டப்பணிகள் குறித்து ஒளிவு மறைவு இன்றி மக்கள் அறியும் வண்ணம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பாளைங்கோட்டை தொகுதி இனை செயலாளர் சலீம் தீன், இத்ரீஸ் பாதுஷா, செயற்குழு உறுப்பினர் அப்துல் வஹாப், ஒ.எம்.எஸ்.காதர்மீரான், மேலப்பாளையம் தெற்கு பகுதி தலைவர் முகைதீன் பாட்ஷா, கிழக்கு பகுதி தலைவர் ஹனீபா, மத்திய பகுதி செயலாளர் இஷாக், பொருளாளர் மசூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தொகுதி துணை செயலாளர் சலீம் தீன் நன்றி உரை ஆற்றினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!