ஓவியம் வரைந்து வாக்குப்பதிவு விழிப்புணர்வு

ஓவியம் வரைந்து வாக்குப்பதிவு விழிப்புணர்வு
X
Vilipunarvu Drawing-ஓவியம் வரைந்து வாக்குப்பதிவு விழிப்புணர்வு

Vilipunarvu Drawing-பாளையங்கோட்டை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகம், வாசகர் வட்டம்,கோபாலசமுத்திரம் கிராம உதயம், சிவராம் கலைகூட்டத்தோடு இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், துணை வட்டாட்சியர் பழனி, வாசகர் வட்டத் துணைத் தலைவர் கணபதி சுப்பிரமணியன், நல்நூலகர் முத்துகிருஷ்ணன், நூலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர் முத்துலெட்சுமி, வாசகர் வட்டம் முத்துசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை பாளை., தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், வட்டாட்சியர் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!