அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி), முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , டி.வி.எஸ் குழுமம் நிர்வாக இயக்குநர் கோபாலஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று (11.11.2021) திறந்து வைத்தனர்..

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டி.வி.எஸ் குழுமம் மற்றும் நண்பர்கள் சார்பில் ரூ.85 இலட்சமும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.15 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணியானது 10.09.2021 அன்று துவங்கப்பட்டு, 09.11.2021 அன்று முடிவடைந்ததுள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு ஆக்சிஜன் சலன் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 500 படுக்கைகள் அமைக்கப்பட்ட தாய்சேய் இனவிருத்தி மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 15,000 நோயாளிகள் பயன்பெறுவார்கள். மேலும், கொரோனா காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவம், செவிலியர், தொழில்நுட்ப பிரிவு, ஆய்வக பிரிவு, ஆக்சிஜன் பிரிவு போன்ற 11 மருத்துவம் சார்ந்த பிரிவுகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி பொறியாளர் அருள்நிதிசெல்வன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!