நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது

நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது
X

ஒரு மருத்துவரின் மனிதநேயம் பயணம் என்ற ஆவணப்படத்திற்கு டாக்டர்.பிரேமச்சந்திரனுக்கு நார்வே நாட்டில் விருது வழங்கப்பட்டது.

மேலப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.பிரேமச்சந்திரனுக்கு ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம் என்ற ஆவணப் படத்துக்கு நார்வே நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள செல்வன் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக திகழும் Dr.S. பிரேமச்சந்திரன் தொடர்ந்து பல வருடங்களாக மருத்துவ பணியோடு மனிதநேய பணிகளை செய்து வருகின்றார்.

எனவே இவரது வாழ்க்கை வரலாற்றை " ஒரு மருத்துவரின் மனித நேயப் பயணம் என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இதனை இயக்குனர் சுபாஷ் கல்யாண் இயக்கியிருந்தார். உதயம் விக்டர் இசையமைத்து உள்ளார்.

இந்த ஆவணப் படத்திற்கு நார்வே நாட்டில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் Special Jury award விருது கிடைத்துள்ளது. இந்த தகவலை டாக்டர்.பிரேமச்சந்திரன், இயக்குனர் சுபாஷ் காளியன், இசையமைப்பாளர் உதயம் விக்டர் ஆகியோர் தெரிவித்தனர்-

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெல்லை புற நகர் சுழற் கழக தலைவர் முரளிதரன், ஈசா, ஆவுடையப்ப குருக்கள், முத்தமிழ், பாலா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil