வேய்ந்தான்குளத்தில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: ஆட்சியர் விஷ்ணு மரக்கன்று நடவு
வேய்ந்தான்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பார்வையிட்டார்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, பார்வையிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்தில் சுற்றுசூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்று சூழலை மேம்படுத்தும் விதமாக நெல்லை நீர்வளம் மூலம் நீர்நிலைகளை பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக வேய்ந்தான்குளத்தில் புனரமைக்கும் பணி மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் 31.07.2021 அன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பூங்கா ஹிந்துஜா லேலன்ட் நிறுவனம் மற்றும் இந்திய ஆயில் கார்பரேசன் நிறுவனம் ஆகியவற்றின் சமூக பொறுப்பு நிதியில் கேர் எர் நிறுவனம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்பரப்புப் பகுதியிலிருந்து அன்னிய இனத்தாவரங்களை அகற்றுதல், ஏரியை ஆழப்படுத்துதல், வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கொண்டு ஏரியை சுற்றிலும் முழு நீர் மட்டத்திற்கு மேல் கரை அமைத்தல் மற்றும் பலப்படுத்துதல், மற்றும் உயிரியில் முறையில் தண்ணீரை சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது.
இதன் மூலமாக தோராயமாக ஏரியின் 12 மில்லியன் கனஅடி கொள்ளளவை 14 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த மறு சீரமைப்பின் காரணமாக 2021 ஆம் ஆண்டின இறுதியில் பெய்த கனமழையின்போது குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை, மேலும், 1992க்குப் பிறகு முதல் முறையாக வேய்ந்தான்குளம் முழு கொள்ளளவை எட்டி கலங்கலின் வழியே உபரி நீர் வழிந்தோடியது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புற பல்லுயிர் பெருகத்திற்கு ஒரு புகலிடம் இருப்பதை உறுதி செய்வதாகும் வேய்ந்தான்குளத்தின் மறுசீரமைப்பானது. பறவைகளின் எண்ணிக்கையில் (உள்ளூர் மற்றும் புலம்பெயர் பறவைகள்) மிகப்பெரிய அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. திரளான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் தட்டான்களோடு நீர்க்காக்கைகள், கொக்குகள், வண்ண நாரைகள், மற்றும் மீன்கொத்திகளை இக்குளத்தில் தற்போது பார்க்கமுடிகிறது. இவ்வினங்கள் பூங்காவில் உள்ள கல் சுவரோவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஈரநிலத்தை பற்றிய கற்றலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 330 நாட்டு மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூ.பொ) தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு மையம் செ.சுயம்பு தங்கராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சாந்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன்அவர்கள், வட்டாச்சியர்கள் செல்வன்(பேரிடர் மேலாண்மை), சண்முக சுப்பிரமணியன் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கேர் எர்த் நிறுவன மேலாளர் அன்ஜன் ஆகியோர் உட்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu