நெல்லை: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வாக்கு பதிவு

நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மான விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதிவாய்ந்த 3403 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதற்காக 109 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த வாக்குப்பதிவு நடைபெறும். நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் ஆட்சியாளருமான விஷ்ணு நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கோவிட் முன் தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்ப சோதனைக் கருவி, முககவசம், சானிடேஷன் உட்பட்ட மருத்துவ பொருட்களை நெல்லை பல்நோக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 924 வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu