மத்திய அரசு கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை :பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து
கொங்கு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் உருவச் சிலைக் குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: நெல்லை அருகே வல்லநாடு, தேனி அருகே வருசைநாடு போல நாடு என்ற பெயர் கொண்டு பல ஊர்கள் உள்ளது. அதனை எல்லாம் மாநிலமாக பிரிக்கமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர் எதிர்கட்சியினருக்கு கொங்கு நாடு என்றால் பயம் எதற்கு வருகிறது. அந்த பயம் தேவையில்லை. அனைத்து பகுதியும் தமிழ்நாடு தான்.
ஆந்திரம்,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் இரண்டாக பிரிந்துள்ளது. அந்த மாநிலங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதை போல தமிழகம் இரண்டாக பிரிக்க வேண்டும் எனபது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தால் அதனை செய்ய வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசு கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என எதிர்கட்சியினர் தான் சொல்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தோடு எதனையும் பார்க்க வேண்டாம் என்றார் நயினார்நாகேந்திரன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu