நெல்லை ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணி: மண்சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

நெல்லை புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டபோது மண் சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய தொழிலாளியை தீயணைப்பு வீர்ர்கள் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த பேருந்து நிலையக் கட்டிடங்களை நவீனப்படுத்துதல், நுழைவு வாயில் முன்பு பூங்காக்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் நெல்லை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நெல்லலை கோபாலசமுத்திரம் ஆவுடையம்மாள்புரம் காலணியை சேர்ந்த ரமேஷ் என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் அருகில் மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 5 அடி ஆழத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ரமேஷ் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை கவனித்த சக ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தொழிலாளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தொழிலாளி ரமேஷ் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu