நெல்லையில் விபத்து ஏற்படுத்திய பஸ்: ஆவேசத்தில் பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்!

நெல்லையில் விபத்து ஏற்படுத்திய பஸ்:   ஆவேசத்தில் பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்!
X
நெல்லையில், விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஹைகிரவுன்டில் இருந்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி வழியாக பழைய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து, சித்தா கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். விசாரணையில் அவர், பெரியபாளையத்தை சேர்ந்த செல்வகணபதி என்பதும், நெல்லையில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, விபத்தில் செல்வகணபதி சிக்கியதை அறிந்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஆவேசத்தில் விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் தான் விபத்து நடைபெற்றதாக கூறி, கற்களைக் கொண்டு அடித்து நொறுக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார். மாநகர துணை காவல் ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future