நெல்லை-"சூழல் காப்போம்" புகைப்பட கண்காட்சி; சிறந்த கலைஞருக்கு சான்றிதழ்

நெல்லை-சூழல் காப்போம் புகைப்பட கண்காட்சி; சிறந்த  கலைஞருக்கு சான்றிதழ்
X

கண்காட்சியில் பரிசுபெறும் புகைப்படக் கலைஞர்.

நெல்லையில் "சூழல் காப்போம்" புகைப்பட கண்காட்சியில் புகைப்படக் கலைஞர்களின் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

நெல்லை முருகன்குறிச்சியில் உள்ள பாலபாக்யா மஹாலில் தாமிரபரணி சூழல் கழகம் சார்பில் "சூழல் காப்போம்" புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

புகைப்படக் கண்காட்சியில் புகைப்பட கலைஞர்களின் சிறந்த புகைப்படங்கள் இடம் பெற்றன. இதில் இயற்கை சார்ந்த படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சிக்கு, சுழல் கழக ஆளுநர் பெருமாட்டி ஜெசிந்தா, கழக முன்னோடி ஆறுமுக பாண்டியன், இதயம் நல்லெண்ணெய் முத்து மற்றும் சுழல் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து கண்காட்சியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று புகைப்பட கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதில் பாளையங்கோட்டையை சேர்ந்த ஸ்ரீ சுவாமி அய்யப்பன் ஸ்டூடியோ உரிமையாளர் எஸ்.எம்.ஆர் வீரபாகுக்கு முதல் பரிசாக சான்றிதழ் மற்றும் ஷீல்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!