நெல்லை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
நெல்லை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா.
வழக்கறிஞர் தொழிலில் தைரியம், தன்நம்பிக்கை, உழைப்பு ஆகியவை இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் என நெல்லை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு சட்டக்பல்லூரியின் 3- வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 ஆண்டு சட்டப்படிப்பு, மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பு முடித்த 439 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
முன்னதாக அவர் பட்டமளிப்பு விழாப் பேரூரையாற்றிப் பேசுகையில் - வழக்கறிஞர்கள் சட்டப்படிப்பு முடிந்தாலும் கடைசிவரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும், இதுதான் படிப்பிற்கான ஆரம்பம், வழக்கறிஞர்கள் எந்த வழக்கு வந்தாலும் அதனை எடுத்து வாதாடவேண்டும்.
மேலும் சட்டம் படித்தவர்கள் சட்டமேதைகளின் வரலாறு, சுயசரிதை ஆகியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும், ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகிவற்றை கட்டாயம் பின்பற்றவேண்டும், மேலும் வழக்கறிஞர் தொழிலில் தைரியம், தன்நம்பிக்கை, உழைப்பு ஆகியவை இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu