/* */

நெல்லை அருகே வயல் வெளியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்

வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே வயல் வெளியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
X

நெல்லை வயல் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.

நெல்லை ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளியில் இன்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்த்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மரம் மற்றும் காய்ந்த செடிகளில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட கடும்புகை மூட்டம் அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் அலுவலக குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர். பின்னர், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், அரசு மரம் உள்பட இரண்டு மரங்கள் முற்றிலும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட வயல் பகுதியில் விவசாய பயிர்கள் பயிரிடப்படாமல் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது எனவே யாரேனும் புகை பிடித்ததன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்மநபர்கள் வேண்டுமென்றே தீ பற்ற வைத்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 21 July 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?