நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக,அமைதியாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி,ராதாபுரம், பாளையங்கோட்டை திருநெல்வேலி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு பெரும்பாலும் தேவைப்படாது. 10 வகையான ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் கோளாறுகள் இல்லை. புகார் வரும் இடங்களில் பொறியாளர்களை கொண்டு இயந்திரங்கள் சரி செய்யப்படும். கொரோனா நோயாளிகளுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர்கள் பாதுகாப்புடன் வாக்கு அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்