நெல்லை மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு ? ஆட்சியர் விளக்கம்

நெல்லை மாவட்டத்தில் குறைந்த வாக்குப்பதிவு ? ஆட்சியர் விளக்கம்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் குறைவான வாக்குப்பதிவு பதிவாகவில்லை என மாவட்ட கலெக்டர் விளக்கமளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும்,திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பூத் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த பணிகளை நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு,திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து மொத்தமாக 66.54% வாக்கு பதிவாகியுள்ளது மொத்தமாக 903770 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த தேர்தல்களை பார்க்கும்போது வழக்கமாக 65 முதல் 70 சதவீத வாக்குகள் தான் பதிவாகும்.நெல்லை மாவட்டத்தில் தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் என்பது குறைவானது அல்ல.இவ்வாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது