நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்

நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்
X

டிஐஜி பிரவேஷ்குமார்

நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த பிரவின்குமார் அபினவ், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்பணியிடத்திற்கு, தஞ்சாவூர் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த பிரவேஷ்குமார் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று, பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நெல்லை சரகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், ரவுடிசம் ஒழிப்பு குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் தடுப்பு, சாதி ரீதியான மோதல்களை தடுப்பது ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். நெல்லை சரகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு தேவையான வசதிகள் என்ன என்பதை அறிந்து மேம்படுத்தப்படும் என்றார்.

Tags

Next Story
ai marketing future