நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் மொட்டையடித்து நூதன போராட்டம்.

நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார்  மொட்டையடித்து நூதன போராட்டம்.
X
நெல்லை மாநகர காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டையடித்து நூதன முறையில் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாகவே ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் படி நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் பெட்ரோல், டீசல் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டையடித்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட திரளானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!