அசோகம் சித்தா கேரில் இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாம்.

அசோகம் சித்தா கேரில் இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாம்.
X

திருநெல்வேலி அசோகம் சித்தா கேரில்இலவச  எலும்பு கனிம அடர்த்தி  பரிசோதனை முகாம்  டாக்டர். ராஜாசங்கர் தலைமையில் நடந்தது. 

வண்ணார்பேட்டையில் உள்ள அசோகம் சித்தா கேரில் நடைபெற்ற இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாமில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

அசோகம் சித்தா கேரில் இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாம் நடைபெற்றது.நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பாலாஜி நகர் அசோகம் சித்தா கேரில் நேற்று இலவச எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் அசோகம் சித்தா கேர் மருத்துவர்கள் டாக்டர். ராஜாசங்கர், வனிதா சங்கர் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்கள். மேலும் அனைத்து எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தீர்வு வழங்கப்பட்டது.

முகாமில் தென்காசி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.இதில் மில்லினியம் லைஃப் சைன்ஸ், ராஜேந்திரன், வின் பார்மா அபுபக்கர், ரிசர்ச் பார்மா வாபர், மருத்துவ மாணவிகள் லிஸிமோனிகா, ப்ரியதர்சனி, கவியரசி, செல்வி மற்றும் பொன் துளசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!