நெல்லை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

நெல்லை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
X
National Level Seminar at Private College of Engineering - வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் 18வது தேசிய அளவில் கருத்தரங்கு.

National Level Seminar at Private College of Engineering- பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் 18வது தேசிய அளவில் கருத்தரங்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் 18வது தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 120 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 18 வது தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரியின் கணினி துறை மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றும் முன்னாள் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பு விருத்தினர்களாக கலந்துகொண்டனர். சோகோ (ZOHO) நிறுவனத்தில் வெப் டிசைனராக பணியாற்றும் 2014 ஆம் ஆண்டு மாணவர் சங்கர் கல்லூரியில் பயிலும் போது கல்லூரி பேராசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கடின பயிற்சி அளித்த நினைவுகளையும், கல்லூரி நிர்வாகம் அளித்த ஊக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

National Level Seminar at Private College of Engineering

மேலும், தொழில்ரீதியான ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு வழங்கினார். அவரை தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநர் வேல்முருகன், வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெகன், சவுத் ரிஷ்னா (south Rishna) நிறுவனத்தில் பணியாற்றும் துர்கா ஆகியோர் தொழில் நிறுவனத்தில் திறமையுடன் பணியாற்றுவது குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். கணினி துறை உதவி பேராசிரியர் மனோகர் தலைமையுரை ஆற்றினார். இதனையடுத்து கணினி துறை கருத்தரங்கு செயல்முறை விளக்கம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கணினி துறை சார்பில் 9 வகையான தொழில்முறை கருத்தரங்கு போட்டிகள் நடைபெற்றன. இதில் அறிக்கை சமர்ப்பித்தல், திட்டப் போட்டி, சிறந்த.வடிவமைப்புகள், CODE-D-BUGGINGS, போட்டோகிராபி. குறும்படம் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த தேசிய கருத்தரங்கு நடைபெறுவதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த கல்லூரி பொதுமேலாளர்கள் முனைவர் k.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், முதல்வர் முனைவர் V.வேல்முருகன், கணினி துறை பேராசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் உள்ளிட்டோரை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருணபாபு ஆகியோர் பாராட்டினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil