நெல்லை தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி

நெல்லை தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி
X
Nellai News Today - வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி.

Nellai News Today - பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி. பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்பு.

திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவில் நடந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்கள் ஆர்வத்துடன் காட்சிப்படுத்தினர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதற்கும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டி 'Innovative'2022' நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது 100க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி வியப்பில் ஆழ்த்தினர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

National Level Science Innovation Competition

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் .V.வேல்முருகன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் 'சமுதாயத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை படைப்பதில் அதிக அளவில் மாணவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக முனைவர்.K.ஜெயக்குமார், பொதுமேலாளர் (வளர்ச்சி), S.கிருஷ்ண குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்ட கல்லூரி அமைப்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் குழும தலைவர் முனைவர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர். வளாக மேலாளர் பேராசிரியர் ஜே.ஜஹாரியா கேப்ரியல் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!