தீயணைப்புத்துறை சார்பில் தேசிய தீயணைப்பு நாள்

தீயணைப்புத்துறை சார்பில் தேசிய தீயணைப்பு நாள்
X
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் தேசிய தீயணைப்பு நாள் நிகழ்ச்சி

1944 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடி விபத்தில் பலியான தீயணைப்புப் படை வீரர்களின் நினைவாக இந்த தேசிய தீயணைப்பு நாள் நிகழ்ச்சி மத்திய அரசு மூலம் கடைபிடிக்கப்படுகிறது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் சத்திய குமார் தலைமையில், பணியின்போது உயிர்நீத்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை நிலையத்திலுள்ள 48 ஊழியர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார், பணியின் போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கடைபிடிக்கப்படும் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில், மரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இதனை கடைப்பிடிக்கும் விதமாக ஒரு வார காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும் மற்றும் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளிலும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.


Tags

Next Story