நெல்லை: நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
நெல்லை மாவட்டத்தில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
நபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வருகிறது. இதில் வளத்தின் அடிப்படையில் முன்னுரிமை துறைகளான விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு, கட்டமைப்புகளுக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்டவற்றிற்கு கடன் அளவிடப்படுகிறது. நபார்டு வங்கி திருநெல்வேலி மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து உள்ளது. 2022-23 வருடத்திற்கான வங்கி கடன் ரூபாய் 6877.85 கோடியாக அளவிடப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா, முதன்மை மாவட்ட மேலாளர் ஆர். கிரேஸ் ஜேமோரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வளம் சார்ந்த கடன் திட்டம் 2022-23 இல் திருநெல்வேலி மாவட்டத்திற்க்கான வங்கி கடன் ரூபாய் 6877.85 கோடியாக நிர்ணயித்துள்ளது. 2021-22 இல் நிர்ணயிக்கப்பட்ட கடன் வளத்தை விட 10% அதிகம். விவசாயம், பண்ணையம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு சென்ற ஆண்டை விட மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நபார்டு வங்கியின் 2022-23 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு குறுகிய பயிர்க்கடனாக ரூ.2635.80 கோடியும், வேளாண் தொழில் சார்ந்த விவசாய கட்டமைப்புகள், கால உணவு மற்றும் பயிர் பதனிடு தொழில்கள் காலக்கடனாக ரூ.1900.82 கோடியும் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மதிப்பீடு ரூ.627.45/ கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன், கல்வி, வீடு கட்டுமான கடன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக்குழுக்களுக்கு முறையே ரூ.53.25 கோடியும், ரூ.241.31கோடியும், ரூ.264.95 கோடியும், ரூ.108.76 கோடியும், ரூ.759 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடனாக அதிக வளம் இருப்பதால் அனைத்து வங்கிகளும் அதிக அளவில் விசாயத்திற்க்கான குறுகிய காலக்கடன் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது என்று மாவட்ட வளர்ச்சி நபார்டு வங்கி மேலாளர் சலீமா தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் முன்னுரிமை கடன்களுக்கான இலக்குகளை அடையவும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் பாடுபடும் என்று முதன்மை மாவட்ட மேலாளர் ஆர். கிரேஸ் ஜே மோரின், தலைமை மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உறுதியளித்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu