கடைகள் அமைப்பதில் தகராறு- ஒருவர் வெட்டிக்கொலை

கடைகள் அமைப்பதில் தகராறு- ஒருவர் வெட்டிக்கொலை
X
Teasput in Setting Sub Showpiece- Murder OP One

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கோவில் கொடைக்கு கடைகள் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ம் தேதி கொடை விழா நடைபெறும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கானோர் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். கோவில் கொடை விழாவின் போது கோவில் வளாகத்தை சுற்றி சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோவிலில் ஒரு தரப்பை சார்ந்த நபர்களுக்கு பாத்திய பட்டது என கூறப்படுகிறது. கோவில் கொடை விழாவின் போது மற்ற சமூகத்தைச் சார்ந்த சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஒரு சிலர் இந்த வருடம் கோவில் வளாகத்தில் கடை அமைத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட சிலர் கடை அமைத்த மாற்று சமூகத்தினரிடம் கொடை விழாவின் போது தகராறு செய்ததாகவும் கடையை காலி செய்ய வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் சிதம்பரம் மற்றும் நடராஜ பெருமான் ஆகியோரை சிலர் அரிவாள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதில் படுகாயமடைந்த நிலையில் இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் சிதம்பரம்(45) என்பவர் பலியானார். மேலும் நடராஜ பெருமாள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!