நெல்லை: வரும் 29ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை: வரும் 29ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தகவல்.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.04.2022 நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தகவல்.

ஆட்சித்தலைவரின் செய்தி குறிப்பு. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.04.2022 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் உதவி உபகரணங்களான மூன்று சக்கர சைக்கிள், பெட்ரோல் ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலி மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், பிரெய்லி வாட்ச், கருப்பு கண்ணாடி, ஊன்று கோல் ஸ்மர்ட் போன், மற்றும் பராமரிப்பு உதவிதொகை, ஆகியவற்கான மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் PMEGP, UYEGP, தொழில் துவங்குவதற்கான மனுக்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக குறைந்த வட்டியில் தொழில் புரிவதற்கான வங்கி கடன், ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் ஆகியவற்றிற்கான மனுக்கள் மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு புரிவதற்கான மனுக்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future education