தாமிரபரணி நதிக்கரை தூய்மைப்படுத்தும் பணி: மேயர் துவக்கி வைத்தார்
*நமது பொருநை நமது பெருமை" என்ற தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணி
*நமது பொருநை நமது பெருமை" என்ற தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணியினை - நெல்லை மாநகராட்சி வண்ணார் பேட்டை மணிமேகலை தெரு பகுதியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
"நமது பொருநை நமது பெருமை" என்ற தாமிரபரணி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி பாபநாசம் தொடங்கி மருதூர் வரை 62 கிலோ மீட்டருக்கு 57 இடங்களில் இன்று (23-04-22) பல்வேறு பள்ளி மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணியினை தச்சை மண்டலம் வார்டு 11ல் உள்ள வண்ணார் பேட்டை மணிமேகலை தெரு பகுதியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தச்சை மண்டல தலைவர் ரேவதிபிரபு, மாநகர பொறியாளர் (பொ) நாராயணன், மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், தச்சை மண்டல உதவி ஆணையாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், இளநிலை பொறியாளர் சங்கரநாராணயன் மற்றும் மாமன்ற உறுப்பினர் திரு.கந்தன் உட்பட சமூக நல ஆர்வலர்கள் பொதுமக்கள் திராளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu