மேலப்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்: விண்ணப்பம் படிவம் வழங்கல்

மேலப்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்: விண்ணப்பம் படிவம் வழங்கல்
X
மேலப்பாளையம் எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பாக அரசின் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து உரிய அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கும் நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா தலைமையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து துவக்கி வைத்தார்.

எஸ்டிபிஐ கட்சி 29வது வார்டு மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் கணவனால் கைவிடபட்ட பெண்கள், வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தனர் பூர்த்தி செய்யப்பட படிவத்தை நேரடியாக உரிய துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 29 வது‌வார்டு தலைவர் பஷீராள், துணைத்தலைர் மைதீன்பாத்து, செயலாளர் ஜொஹ்ராபாத்திமா, துணைச்செயலாளர் மாஜான்பீவி, பொருளாளர் சபர்நிஷா, கிளை செயற்குழு உறுப்பினர் பஷீராள்உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products