மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

நெல்லை, பாளையங்கோட்டையில், தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், பாளைங்கோட்டை மேற்கு மண்டல் சார்பில், பாளைங்கோட்டை மண்டலத் தலைவர் போரச்சிகண்ணன் அறிவுறுத்தலின் பேரில், 22வது வார்டில், கிளைத்தலைவர் பகவதியப்பன் தலைமையில், வீடுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள 800வீடுகளுக்கு கபசுரக்குடிநீருடன், முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கமிட்டி தலைவர்கள் மாணிக்கம், சுந்தர், கிளை தலைவர்கள் .கணேசன், சேது, கிளை செயலாளர்கள் முரளி, ரவி, சரவணன், விக்னேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!