நெல்லை-ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பெரிய திருவடி என வைணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் - பட்சிராஜா் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரம். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். பட்சிராஜா் ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார்.
சிறப்பு வாய்ந்த கருடாழ்வாருக்கு பெருமாள் திருக்கோவில்களில் ஈசான மூலையில் மதில்சுவற்றில் சன்னதி அமைந்துள்ளது. திருஆடி சுவாதியை முன்னிட்டு வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதன் ஒரு நிகழ்வாக பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் வடக்கு மதில் சுவா் மேல் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக கோயில் உள் கருடன் முன் கும்பங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து வெளி கருடாழ்வாருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, திரவிய பொடி, பால், தயிா், பஞ்சாமிருதம், தேன், இளநீா், சந்தணம் கொண்டு சிறப்பாக திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று கற்பூரு ஆரத்தி காண்பிக்கப்பட்து. பக்கதா்கள் தங்கள் வேண்டுதல்களுக்காக கருடாழ்வாருக்கு தேங்காய் விடல் போட்டு வேண்டுதலை நிறைவேற்றினா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா். கொரோனா காரணமாக பக்தா்கள் ஆலயத்திற்குள் அனுமதி இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu