பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் நடத்திய ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

இதேபோல் ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் சிலிண்டருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் மத்திய- மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!