திருநெல்வேலியில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதையும், கொண்டாடும் வகையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த சட்டப்பணிகள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியினை திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி நசீர் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் திறந்து வைத்து, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு வாகனமானது பானளயங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள முன்னீர்பள்ளம், பொட்டல்பச்சேரி, ஜோதிபுரம், புதுக்கிராமம், ஜே.ஜே.நகர், மணிநகர், மெதார்தள் நகர், ஆரைக்குளம், மேலமுன்னீர்பள்ளம், அன்னைநகர், சக்திநகர், லெட்சுமிநகர், திருநெல்லைநகர், ஆரைக்குளம், வடக்குசெல்லத்துரை நகர், தருவை, ஈஸ்வரிபுரம், ஆலங்குளம், அடைமிப்பான்குளம், கண்டிதான்குளம், திடியூர், இளையம்முத்தூர், பூக்குழி தமிழக்குறிச்சி, செங்குளம், கும்த்தார்குளம், கீழ ஓமநல்லூர், பேரின்பபுரம், வடக்கூர், குறவர்குளம், மேலூர், பொன்னாக்குடி காமராஜ் காலனி, டி.பொன்னாக்குடி, வாஞ்சிநாதன் நகர், எம்.எம்.நகர், நேசமணி நகர், சந்தோஷ்நகர், சிங்கோ ஏ காலனி, அன்னை நகரம், மற்றும் சமத்துவபுரம் ஆகிய 47 கிராமங்களுக்கு சென்று மக்களிடையே சட்ட உதவிகளை உச்ச நீதிமன்றம் வரை கிடைக்கும் என்ற விவரத்தையும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் என்ன என்ன பணிகள் நடக்கின்றன என்பது குறித்தும், மேலும் மக்கள் நீதிமன்றம் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஆகியவற்றில் எப்படிப்பட்ட வழக்குகள் முடிக்கலாம் என்றும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிப்பதனால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்.இந்த விழிப்புணர்வு முகாமானது வான் முகில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இதுவரை 199 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 14660 பேர் பயனடைந்துள்ளார்கள்.நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா முன்னிலை வகித்தார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்டின், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், போக்சோ நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி திருமகள், குடும்பநல நீதிமன்ற நீதிபதி குமரேசன், 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிசங்கர், 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேல். கூடுதல் உரிமையியல் நீதிபதி சுப்பையா. 2வது கூடுதல் உரிமையியல் நீதிபதி சந்தானம், நீதிமன்ற நீதித்துறை நடுவர் எண் 4 ஜெயகணேஷ், எண் விஜயலெட்சுமி கூடுதல் மகிலா நீதிபதி ராஜேஷ்குமார்,செக் மோசடி வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.அருண்குமார், மொபைல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்டர், வழக்கறிஞர் சங்க தலைவர் சிவ சூர்யநாராயணன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மாரியப்ப காந்தி, வான் முகில் இயக்குநர் பிரிட்டோ, ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், மதியழகன், மாரியம்மாள், மாலதி, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் பிஸ்மிதா செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu