சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஆபாசபடம் எடுத்து மிரட்டல்!

சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஆபாசபடம் எடுத்து மிரட்டல்!
X

பேராசிரியர் ராஜேஷ் பாரதி

சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு ஆபாச படம் எடுத்து மிரட்டிய பேராசிரியர் மீது வழக்குப் பதிவு.

நெல்லை பாளையங்கோட்டை அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியில் வசிக்கும் சட்டக்கல்லூரி துணைப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி ஆன்லைனில் படம் எடுக்கும்போது தனது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி ஊருக்கு செல்வதை அறிந்த உதவி பேராசிரியர் தனது காரில் கொன்றுவிடுவதாக அழைத்து நடுவழியில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு அடிக்கடி பாலியல் உறவு செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனிடையே மாணவி மாநகர காவல்துறை ஆணையாளர் அன்புடன் புகார் மனுவை அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே இவர் தனது பிறந்தநாளின் போது சட்டக் கல்லூரி வாசலில் அரிவாளைக் கொண்டு கேக் வெட்டிய போது அந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் சட்டக்கல்லூரி மாணவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!