நெல்லையில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நெல்லையில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லையில் நில அளவை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதன்படி நெல்லை மாவட்டத்தில் நில அளவை அலுவலகம் சங்கம் சார்பில் இன்று காலை முதல் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொருளாளர் ஸ்டேன்லி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் மணிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

களப் பணியாளர்களின் பணி சுமையை குறைத்து பணியை முறைப்படுத்த வேண்டும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதி அடிப்படையிலேயே நில அளவர் பணி நியமனத்தை நிரப்ப வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், ஊழியர்களின் விரோத போக்கை கடைப்பிடிக்கும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு அலுவலகம் வெறிச்சோடியது. நெல்லையில் நடந்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிலவளவை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தோழமை சங்கங்களுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai and future cities