அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்கள் பயன்படுத்திய சிக்கி முக்கி கல்
கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள்.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் டிசம்பர் மாத சிறப்பு காட்சி பொருள்கள் கண்காட்சி துவங்கப்பட்டது. இக்கண்காட்சியில் காணி பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிக்கி முக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிக்கி முக்கிக் கல் - நெருப்பு உண்டாக்கும் கல். சிக்கி முக்கிக் கல், சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப்பாறை ஆகும். இக்கல்லானது கடினமான படிகவடிவு வெளித்தெரியாத (cryptocrystalline) கனிம படிகக்கல்லின் (mineral quartz) படிவு வடிவமாகும். பழைய கற்காலத்தில் மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டு பிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைப்பதற்கு பயன்படுத்தினான்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கி முக்கி கல் காணி பழங்குடியினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. இன்று துவங்கப்பட்ட இக்கண்காட்சி இந்த மாதம் முழுவதும் நடைபெறும்.
இக் கண்காட்சியை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu