நெல்லையில் ஊரடங்கு விதிமுறையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்

நெல்லையில் ஊரடங்கு விதிமுறையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்
X
நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடையை மூட உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோய்தடுப்பு நடவடிக்கையாக பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் செயல்படும் பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளான சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஆகிய நிறுவனங்கள் முன்பக்க கதவுகளை அடைத்துவிட்டு, மாற்று வழியில் வாடிக்கையாளர்கள் கடைக்குள் வியாபாரம் நடந்து வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்ததைத் தொடர்ந்து நெல்லை கோட்டாட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடைபகுதிக்கு வந்து ஆய்வு செய்ததில் விதிமுறைகள் மீறி செயல்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து கடைநிர்வாகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்., மேலும் கடையை மூடுமாறும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இரண்டு கடைகளும் மூடப்பட்டது.

Tags

Next Story