நெல்லையில் இஸ்லாமிய பொருளாதார சிறப்பு சொற்பொழிவு

இஸ்லாமிய பொருளாதார சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் பேசிய ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ
நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் எல் கே எஸ் மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளையின் இஸ்லாமிய பொருளாதாரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லலாஹ், இஸ்லாமிய பொருளாதாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர், கல்லூரி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் , கல்லூரி உதவி முதல்வர் எல் கே எஸ் மீரான் முஹைதின் தரகனார் குடும்பத்தார்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமுமுக மமக மாநில துணைத்தலைவர் ஹமீது மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா மமக மாவட்ட செயலாளர் ஜாவித் மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன் ஐபிபி மாநில செயலாளர் அப்துல் காதர் மண்பஈ மாநில அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி ,நகர கிளைக் கழக தமுமுக, மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu