எப். எக்ஸ் கல்லூரியில் சர்வதேச அமைதி தின உறுதிமொழி ஏற்பு

எப். எக்ஸ் கல்லூரியில் சர்வதேச அமைதி தின உறுதிமொழி ஏற்பு
X

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வண்ணார்பேட்டை எப். எக்ஸ் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவை சங்கம் சார்பில், சர்வதேச அமைதி தினத்தையொட்டி, கல்லூரி முதல்வர்.முனைவர் வேல்முருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று, உலகம் முழுவதும் சர்வதேச சமாதான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 24 மணிநேர அகிம்சை மற்றும் போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதன் மூலம், அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாக ஐநா பொதுச்சபை அறிவித்துள்ளது. ஜாதி மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்கள் சமமாக நடத்தப்படும் உலகத்தை உருவாக்குவது இதில் அடங்கும். இது அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும், அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதி தினம் என்பது, அனைவரும் ஒன்றாக இணைந்து என்ன உருவாக்க முடியும் என்பதை ஒரு ஊக்கமளிக்கும் நினைவூட்டல் ஆகும்.

இதனிடையே, கல்லூரியின் ஏபிஜே அப்துல்கலாம் வளாகத்தின் முன்பு, கல்லூரியின் இளைஞர் செஞ்சுலுவை சங்கம் சார்பில் சர்வதேச அமைதி தினத்தை கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் கடைபிடித்தனர். முதல் கட்டமாக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பேராசிரியர்கள், மாணவர்கள் அமைதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரிய காபிரியேல், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சுலுவை சங்கச் செயலாளர் .டேவிட் அய்லிங் செய்திருந்தார்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!