பாளை அரசு மருத்துவமனைப்பகுதி கடைகளில் ஆய்வு - அதிகாரிகள் சுறுசுறுப்பு!

பாளை அரசு மருத்துவமனைப்பகுதி கடைகளில் ஆய்வு - அதிகாரிகள் சுறுசுறுப்பு!
X
நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில், கொரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றியுள்ள அனைத்து கடைகளிலும் மாநகராட்சி சார்பில், அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா ஆலோசனைபடி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள கடைகளில், அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்றும், வாடிக்கையாளர்கள், கடைக்கார்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்றும் ஆய்வு நடத்தினர்.

இதேபோல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது என்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நோய் பரவாமல் இருப்பதற்காக, விதிமுறைகளை கடைப்பிடிக்க படுகிறதா என தீவிர ஆய்வு மேற்கொண்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story