இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம்: ஆணை வெளியிட்டு ஆட்சியர் உதவி
திசையன்விளை வட்டாச்சியர் செல்வக்குமார் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாச்சியர், பத்மபிரியா ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையினை அந்த குடும்பத்தாரிடம் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பனை தொழில் செய்து வரும் துரைப்பாண்டி, 90 வயது முதியவரின் குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அவரது மனைவிக்கும் மாவட்ட அட்சித்தலைவர் வே.விஷ்ணு உத்தரவின் பேரில் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
திசையன்விளை வட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 90 வயது நிறைந்த முதியவர் துரைப்பாண்டி மற்றும் அவரது மனைவி வேலம்மாள் ஆகியோர் வயதான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு பனை தொழில் செய்து வருவதாக நாளிதழில் செய்தி வெளியானது. துரைப்பாண்டி இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகிறார். இச்செய்தி அறிந்த மாவட்ட ஆட்சிதலைவர் முதியோரின் குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அவரது மனைவி வேலம்மாள் அவர்களுக்கும் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திசையன்விளை வட்டாச்சியர் செல்வக்குமார் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாச்சியர், பத்மபிரியா ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையினை அந்த குடும்பத்தாரிடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu