திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிக்கான ஆதார வள பயிற்சி மையம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் மாற்றுத்திறனாளிக்கான ஆதரவள மற்றும் பயிற்சி மையத்தினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாற்றுத்திறனாளிக்கான ஆதரவள மற்றும் பயிற்சி மையத்தினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிக்கான ஆதரவள மற்றும் பயிற்சி மையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வந்த இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புதுபிக்கப்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மேலும், இக்கட்டிடம் புணரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவள மற்றும் பயிற்சி மையமாக செயல்படுத்தப்படுகின்றது. இம்மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய 0 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம், ரெடிங்டன் பவுண்டேஷன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான பயிற்சி மையம், தகவல் மையம் மற்றும் சிறார் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பூங்கா ஆகியவைகள் இந்த ஆதரவள மையத்தில் செயல்ப்படுத்தபடவுள்ளது.
இந்த மையத்தின் மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பல்வேறு பயற்சிகள் வழங்குவதால் அவர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யவுள்ளது.மேலும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.77 இலட்சம் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2 நபர்களுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பில் நவீன செயற்கைக்கால்களும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உட்பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu