அரசு மருத்துவ கல்லூாயில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டிடங்களை காணொலி வாயிலாக தலைமைச்செயலகத்திலிருந்து இன்று (14.04.2022) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.62.35 கோடி மதிப்பலான புதிய கட்டிடங்கள் கானொளிவாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இளங்கலை மருத்துவ மாணவர்கள் தங்கும் விடுதி, இளங்கலை மருத்துவ மாணவிகள் தங்கும் விடுதி, பயிற்சி மருத்துவ மாணவர்கள் விடுதி, பயிற்சி மருத்துவ மாணவிகள் விடுதி, உள்ளிருப்பு ஆண் மருத்துவர்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு பெண் மருத்துவர்கள் குடியிருப்பு, மாணவர்களுக்கான பொது உணவகம், மாணவிகளுக்கான பொது உணவகம், துணை விரிவுரை அரங்க கட்டிடம் 1, துணை விரிவுரை அரங்க கட்டிடம் 2, நோய்குறியியல் துணை விரிவுரை அரங்கம், சட்டம் சார்ந்த மருத்துவ உடற்கூறு ஆராய்ச்சி மையம் போன்ற 12 புதிய கட்டிடங்கள் பயண்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன் செயற்பொறியாளர் மு.சங்கரலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், உதவி செயற் பொறியாளர் அருள் நெரிச்செல்வன், உதவிப் பொறியாளர் எஜின் ராகுல், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu