/* */

பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

நெல்லை பாளையங்கோட்டை சிறையில், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

HIGHLIGHTS

பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
X

தப்பி ஓடிய ஆயுள்தண்டனை கைதி கோவிந்தராஜன்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் கோவிந்தராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அதன் அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதியாக கோவிந்தராஜன் பாளை மத்திய சிறையில் இருந்து வந்தார்,

இந்த சூழ்நிலையில் இன்று பகல் கோவிந்தராஜன் வழக்கம்போல் ஜெயிலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கைதி கோவிந்தராஜன் திடீரென காணாமல் போயுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உடனடியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சிறை காவலர்கள் குழுவாக பிரிந்து தப்பி ஓடிய கைதி கோவிந்தராஜனை தேடி வருகின்றனர். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சென்று காவலர்கள் கோவிந்தராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கைதிகளை மருத்துவமனைகளுக்கோஅல்லது நீதிமன்றங்களுக்கோவெளியில் அழைத்துச் செல்லும் போது இதுபோன்று தப்பி ஓடுவது வழக்கம் ஆனால் சிறைக்குள் வேலை பார்த்துக்கொண்டு இருந்த கைதி தப்பி ஓடியதால் சிறையில் காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்த மனோ என்பவர் சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இதை கண்டித்து தற்போது வரை முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் சிறைத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 5 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?