நெல்லையில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்: ஆட்சியர் ஆய்வு

நெல்லையில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்: ஆட்சியர் ஆய்வு
X

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வீடுதேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிற்று ஆய்வு செய்தார்.

நெல்லை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான் காம் கட்டமாக கொரோனா தடுப்புசி போடும் சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. மாவட்ட அளவில் 542 முகாம்கள் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி பகுதியில் 135 முகாம்கள் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 900 பணியாளர்கள் இப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று தடுப்புசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து தடுப்புசி போடும் பணி நடைப்பெற்றது.

குறிப்பாக வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்புசி போடப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்நிகழ்ச்சியில் மாநகரட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், நகர் நல அலுவலர் மரு.இராஜேந்திரன், உதவி ஆணையர் ஐயப்பன், மரு.ரஞ்சித், இளங்கோவன் உட்பட அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business