இலவச வீட்டுமனை பட்டா- வேட்பாளர் உறுதி

இலவச வீட்டுமனை பட்டா- வேட்பாளர் உறுதி
X

பாளையங்கோட்டை தொகுதியில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவேன் என எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் வாக்குறுதி அளித்தார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முகம்மது முபாரக் குக்கர் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாளையங்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட ஏ.ஆர் லைன், தியாகராஜா நகர், மகாராஜா நகர், இலந்தை குளம், தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் உழவர் சந்தை அருகே பேசிய அவர் தியாகராஜ நகர் மேம்பால பணிகள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடபட்டுள்ளதால் இங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டுள்ளனர்.இதனால் தேவையற்ற போக்குவரத்து நெருக்கடிகளும் விபத்துகளும் ஏற்படுகிறது என கூறினார்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை வசதி,தூய்மையான குடிநீர்,கழிவு நீர் ஓடை, மின்விளக்கு என அனைத்தும் முற்றிலுமாக புறக்கணிக்கபட்ட பகுதியாக உள்ள இப்பகுதியை தான் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கபட்டால் அடிப்படை தேவைகளை சீர் செய்து இங்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வரும் மக்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வேன் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!