காந்திமதி பெண்கள் பள்ளியில் கோவிட் மையம் அமைக்க இந்து முன்னணி எதிர்ப்பு
கொரோனா பரிசோதனை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.
நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டை ஹைகிரவுண்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தொடங்கிவைத்தார்.
அப்போது திடீரென பள்ளி வளாகத்திற்குள் புகுந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சித் தலைவர் கார் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த பாளையங்கோட்டையில் உள்ள காந்திமதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொற்று பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவர்களை வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர் பள்ளிக்கு மாற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாங்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மற்ற மதத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று இதுபோல தொற்று பரிசோதனை மையம் அமைக்க முடியுமா அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி என்பதால் இந்த பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்றி பரிசோதனை மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் இங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu