/* */

கோயில்களில் வழிபட அனுமதி கோரி இந்து முன்னணியினர் நெல்லை ஆட்சியரிடம் மனு

ஆடி அமாவாசை, ஆடி பூரத்தில் பக்தர்கள் வழிபட மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

கோயில்களில் வழிபட அனுமதி கோரி இந்து முன்னணியினர் நெல்லை ஆட்சியரிடம் மனு
X

நெல்லை மாவட்டத்தில் இந்து கோயில்களில் மட்டும், திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில், நெல்லையப்பர் திருக்கோயில், பாபநாசம் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆகிய கோயில்களில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி பூரம் விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஆடி அமாவாசை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்து முன்னணி சார்பில், அதன் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள், மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வி.பி.ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:நெல்லை மாவட்டத்தில் மற்ற மதத்தினர் வழக்கம் போல் திருவிழாக்களை நடத்துகின்றனர்.ஆனால், இந்து கோவில்களில் மட்டும் அதிகாரிகள் திட்டமிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கின்றனர். ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் ஆண்டுதோறும் திதி கொடுப்பார்கள். அதை நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதை கண்டித்து தான் இன்று போராட்டம் நடத்தினோம் என்று தெரிவித்தார்.

Updated On: 2 Aug 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...