உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி

உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி
X

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி இன்று நடைபெற்றது.

ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாட படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓர் சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் திருநெல்வேலி ,தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை மாணவ மாணவிகள் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தனர். இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் முருகையா நன்றியுரை வழங்கினார். இந்த ஓவியக் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கவிஞர். சுப்பையா ,கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!