பலத்த காற்று வீசியதால் கார் மீது மரம் சாய்ந்து விழுந்தது

பலத்த காற்று வீசியதால்  கார் மீது மரம் சாய்ந்து விழுந்தது
X
நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை; பலத்த காற்றுக்கு கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் மிதமான மழை பெய்து வருகிறது.


சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது இந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் நெல்லை மாநகர் பகுதியில் இடி மின்னலுடன் திடீர் மழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பனைமரம் திடீரென பலத்த காற்றை தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்து சாலையோரம் நின்ற கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுமார் 20 நிமிடம் கன மழை கொட்டித் தீர்த்தது தொடர்ந்து நெல்லையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடும் கோடை வெயிலுக்கு இடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லை மக்கள் வெப்பத்தை சமாளித்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!