சிறுமியிடம் போனில் தொல்லை; வீட்டுமுன் மிரட்டல் விடுத்தவர் போக்சோவில் கைது

சிறுமியிடம் போனில் தொல்லை; வீட்டுமுன் மிரட்டல் விடுத்தவர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

தொலைபேசியில் சிறுமியிடம் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (23) . இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 27.07.2021 அன்று ரமேஷ் அப்பெண்ணின் வீட்டு முன் நின்று அவரது தந்தைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் ரசிதா விசாரணை மேற்கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture