நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு பயிற்சி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு பயிற்சி நடைபெற்றது.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு பயிற்சி.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே வேலைவாய்ப்பு மையம் மற்றும் என் இ எஸ் நெல்லை தொழில் முனைவோர் பள்ளி இணைந்து புதிய தொழில் முனைவோர்களுக்காக "உங்கள் தொழிலில் தோற்றுப் போக தயாராக இருங்கள்" என்ற தலைப்பில் ஓரு வித்தியாசமான தொழில் வழிகாட்டு கருத்தரங்கம். பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் கலந்து ஆர்வத்தோடு பங்கு கொண்டு பயன்பெற்றனர். விழா தமிழ்த்தாய் வாழ்த்தோடு அரசு அருங்காட்சியகம் உள்ளரங்கில் நடந்தது. இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி நடத்திய அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி பேசும்போது:- அருங்காட்சியகம் பெண்களுக்கு தொடர்ந்து பல வருடங்களாக கொடுத்து வரும் பல்வேறு தொழில் பயிற்சிகளைப் பற்றி விளக்கமாக கூறினார். மேலும் இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் முன்னேறி இன்று பல இடங்களில் தொழில் தொடங்கி ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறிக் கொண்டிருப்பதை பற்றியும், இது போன்ற பயிற்சி நிகழ்வுகள் அவர்களை மேலும் அவர்கள் தொழிலில் சிறந்த நிலையை அடைய உறுதுணையாக இருக்கும் என்றும் கூறி வாழ்த்திப் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட தற்போது கோயம்புத்தூரில் வசித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு என பல்வேறு பயிற்சிகளை உலகம் முழுவதும் சென்று நடத்தி நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கி வரும் பிஸ் நெட் solutions, மற்றும் ஸ்பைரெக்ஸ் நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர் சுந்தர் கலந்து கொண்டு விரிவான விளக்கமான வழிகாட்டு உரைகளை வழங்கினார்.
இரண்டு மணி நேரம் நடந்த கருத்தரங்கில் தொழில் முனைவோராக மாற செய்ய வேண்டியது என்ன ? எப்படி தொழிலுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும், என்னென்ன பயிற்சிகள் தேவை? தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன போன்ற பல்வேறு விஷயங்களை பற்றி மிகச்சிறந்த உதரணங்களோடும், பல்வேறு சாதனை நிறுவனங்களின் வெற்றித் தரவுகள் பற்றிய குறிப்புகளோடும் உரையாற்றி மிகச்சிறப்பான வழிகாட்டு பயிற்சிகளை வழங்கினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் பயனுள்ள நிகழ்வாக இருந்ததாக கூறி இது போன்ற நிகழ்வுகள் நெல்லையில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மூத்த தமிழறிஞர் சங்க மாநில தலைவர் கவிஞர். சுப்பையா, என்.இ.எஸ். நெல்லை தொழில் முனைவோர் பள்ளி கபாலி சுப்ரமணியம், ரூரல் பேஸ்கட் நிறுவனத்தை சேர்ந்த பழனிராஜன், என்.பி.என்.கே நல்லதைப் பகிர்வது நம் கடமை வேலை வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திருமலை ராஜா, ஸ்ரீரங்கம், கசியா, சூர்யா, தீஸான் பானு, சத்தக்கத்துல்லா அப்பா கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் எட்.ப்ரியதர்ஷினி ஆகியோர் இணைந்து இதற்கான செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu